'சொல்லி பாத்தேன் கேக்கல சார்'...'கோபத்தில் 'பரோட்டா மாஸ்டர்' செஞ்ச கொடூரம்...அதிரவைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பஸ் நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த மனைவியை கணவனே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் மனைவியை கொலை செய்ய முயற்சித்தது எதற்காக என்பது குறித்து காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரும் அதேபகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் பயனாக 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சிவக்குமார் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வரும் நிலையில், தமிழ்ச்செல்வி ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இருவரது திருமண வாழ்வில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்விக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் தகாத பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிவக்குமார் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் தமிழ்செல்வி கணவனிடம் பேசுவதை முழுமையாக தவிர்த்துள்ளார். சிவகுமார் எவ்வளவோ முயன்றும் தமிழ்செல்வி அவரிடம் பேசவில்லை. இதனால் அவர் விரக்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை தமிழ்ச்செல்வி வேலை முடிந்ததும் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருக்கோவிலூர் பஸ் நிலையத்துக்கு வந்து, பஸ்சுக்காக காத்திருந்தார். இதனை அறிந்து மனைவியை பின்தொடர்ந்து வந்த சிவக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். இதனால் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மற்ற பயணிகள் அலறினார்கள். அப்போது அங்கிருந்த சிலர் சிவக்குமாரை மடக்கி பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்டத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் வைத்து கணவனே மனைவின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..
- ‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..
- ‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..
- 'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- ‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..
- ‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..
- ‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..
- ‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’!