“உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னா...”... “காதலியிடம் காதலன் போட்ட கட்டளை”.. “அதிரடியாக கைது”!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியைச் சேர்ந்தவர் 24 வயதான கலையரசன். கடலூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்த இவர் அங்குள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதே செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த 22 வயது இளம் பெண்ணுடன் இவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, இருவரும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இடையில் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து ஆசை வார்த்தை கூறி பலாத்காரமும் செய்துள்ளார்.
அதன் பின், இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர். அங்கும் இருவரின் காதல் தொடர, அப்பெண் தன்னை கல்யாணம் செய்துகொள்ள வேண்டி கலையரசனிடம் கேட்டுள்ளார். ஆனால் கலையரசனோ, அப்பெண்ணிடம், ‘உனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால்தான் உன்னை கல்யாணம் செய்துகொள்வேன்’ என்று கூறியுள்ளார்.
முதலில் வேறு வழியின்றி கலையரசன் கேட்டுக்கொண்ட படி புகைப்படங்களை அப்பெண்ணிடம் மேலும் மேலும் கலையரசன் அப்படியான புகைப்படங்களைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில்தான் அப்பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. ‘எதற்காக இப்படி புகைப்படங்களை வாங்குகிறாய்?’என்று அப்பெண் கலையரசனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கலையரசனோ, ‘என்னையே சந்தேகப்படுகிறாயா?’ என்று கூறி, ஆத்திரத்தில் அப்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை எல்லாம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கலையரசன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரோட தான் வாழப்போறேன்!'... 'யாராலும் தடுக்க முடியாது'... '54 வயது பெண்ணுக்கும் 22 வயது ஆணுக்கும் உண்டான காதல்'...
- அவகிட்ட இருந்து 'தப்பிக்க' எனக்கு வேற வழி தெரியல... கல்யாணத்திலிருந்து எஸ்கேப் ஆக... காதலன் செய்த காரியம்...!
- உலகின் 'நம்பர் 1' பணக்காரரின் மொபைலை ஹேக் செய்து... 'அந்தரங்க' புகைப்படங்களை... மனைவிக்கு அனுப்பிய இளவரசர்?
- காதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’!.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- சின்ன 'குழந்தை' அவன்...! என்ன விட்டுட்டு போய்ட்டான்... கண்கலங்க வைக்கும் முதியவரின் காளைப் பாசம்...!
- 'ஆந்தையுடன் கமிட் ஆன கிளி!'... 'காதல் மோகத்தில் டூயட்'...
- சொந்தக்காரங்க எவ்வளவோ சொல்லியும்... அழுதபடியே இருந்தார்.... 73 வருட காதல் கணவர் செய்த காரியம்... !
- VIDEO: ‘ஒரு கையில் செல்போன்’.. ‘மறுகையில் ஸ்டியரிங்’.. பயணிகள் உயிருடன் விளையாடிய டிரைவர்.. பரபரப்பு வீடியோ..!