'ஷாப்பிங் மால், வணிக வளாகங்களில் வரம்பு மீறிய பார்க்கிங் கட்டணம்'?... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள மால்கள், வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமான விதிகளின்படி, வணிக வளாகங்கள், மால்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த வாகன நிறுத்துமிடங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த விஜயகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவருடைய மனுவில், ''வணிக வளாகங்கள், மால்களில் வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதை மீறி சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக'' புகார் தெரிவித்துள்ளார். வாகன நிறுத்துமிடங்களுக்குக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என ஆந்திரா மற்றும் குஜராத் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மால்கள், வணிக வளாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிக கட்டண வசூல் குறித்து புகார் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
என்கிட்டயே சோசியல் டிஸ்டன்ஸா...? 'மாமியார் போட்ட மாஸ்டர் பிளான்...' - சதிவலையில் சிக்கிய மருமகள்...!
தொடர்புடைய செய்திகள்
- 'எலி மட்டும் இல்ல'... 'ஊழியர்களுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி'... 'பாழான பிரபல ஷாப்பிங் மால்'... வைரலாகும் வீடியோ!
- 'ஷாப்பிங்' மாலில் 'துரத்தி துரத்தி'... பிரபல வீரரிடம் 'ரசிகரின் இழிவான' செயல் ... வைரலாகும் வீடியோ!
- 'உன்ன உள்ள விடமுடியாது'...'வெளியே போ'...பிரபல மாலில் நடந்த கொடுமை...வைரலாகும் வீடியோ!