'நீ எனக்கு சொல்லி தர்றியா?'.. 'டிக்கெட் பரிசோதகரின் செயலால்'.. அதிர்ந்து போன ரயில் நிலையம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முட்டை வியாபாரம் செய்யும் மாரியம்மாள், தனது சொந்த ஊரான சேலத்தில் இருந்து, தனது கணவருடன், வியாபார விஷயமாக அடிக்கடி கோவை வருவது வழக்கம். 

அப்படித்தான் கோவை ரயில் நிலையத்தில் இருந்து தனது பாத்திர பண்டங்களுடன் மீண்டும் சேலம் ஏறியிருக்கிறார். அப்போது அங்குவந்த டிக்கெட் பரிசோதகர், மாரியம்மாளிடம் டிக்கெட்டை காண்பிக்கச் சொல்லி கேட்டுள்ளார். அதற்கு, மாரியம்மாள், தனது கணவர் வேறு ஒரு கம்பார்ட்மெண்ட்டில் இருப்பதாகவும், அவரிடம்தான் டிக்கெட் உள்ளது என்றும், இருவரும் அவசரமாக ரயில ஏறியதால் இந்த நிலைமை என்றும் கூறியுள்ளார். 

ஆனால் டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார், இதை ஏற்றுக்கொள்ள மனமின்றி, மாரியம்மாளை கீழிறக்கியதோடு,பாத்திரங்களை எட்டி உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டதும் அங்குவந்த தலைமைக்காவலர் வீரமுத்து, பெண் பயணிகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமா? என்று கேட்டுள்ளார் பத்மகுமார். 

அதற்கு டென்ஷனான, பரிசோதகர் பத்மகுமார், ‘நீ யார்யா எனக்கு அட்வைஸ் பண்றதுக்கு?’ என்று, அந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

RAILWAY, INDIANRAILWAYS, COIMBATORE, TICKET, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்