'அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது’.. 'புரியலன்ற சோமாரிகளுக்கு'.. வைரலாகும் கமலின் புதிய ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மிக அண்மையில், கோட்சேவை இந்து மதத்தின் முதல் தீவிரவாதி என விமர்சித்ததும், தொடர்ந்து தன்னை காந்திய வழியில் நிற்பவராகவும் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இணையத்தில் வலம்வருகிறது.
அந்த அறிக்கை:
சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர, தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ 'இந்து' என நாமகரணம் செய்யப்பட்டோம்.
ஆண்டு, அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை..
நாம் ‘இந்தியர் ’ என்கிற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக/அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு... ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! தமிழா - நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருடிய குற்றத்துக்கு கை துண்டிப்பா..?’ இந்திய இளைஞருக்குப் பணியிடத்தில் கிடைத்த தண்டனை..!
- ‘உலகக்கோப்பையில் ஒரு மிகப் பெரிய டாஸ்க்’.. தயார் செய்த இங்கிலாந்து..! தகர்க்குமா இந்தியா?
- அபி நந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததா பாகிஸ்தான் உளவு அமைப்பு..?
- 'இவங்களும் கேம்ல மூழ்கினா என்ன செய்றது?'.. முக்கிய துறையில் பப்ஜி விளையாடுவதை கண்காணிக்க உத்தரவு!
- '24 வயதில் கபில்தேவ் தொட்ட சாதனை’.. 36 வருடங்களுக்கு பிறகு முறியடித்த 23 வயது வீரர்!
- 'கமல் அப்படி என்ன பேசினாரு'?... வெகுண்டெழுந்த 'பாஜக'... வைரலாகும் கமலின் பேச்சு!
- போன வருஷம் ஃபுல்லா இந்த சைட்களை பாத்தவங்கதான் அதிகமாம்!'.. காட்டிக்கொடுத்த 'கூகுள்'!
- “ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு”!... பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!
- ‘இந்தியாவுக்கும் சொந்தமல்ல..பாகிஸ்தானுக்கும் அல்ல..காஷ்மீர் காஷ்மீரிகளுடையது’.. அஃப்ரிடி அதிரடி!
- ‘கோலிக்கு அடுத்து, அந்த இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் யாரு தெரியுமா?’.. பிரபல வீரர் அதிரடி!