‘3 புதிய கொள்கைகள்’!.. ‘இதை கட்சி தொண்டர்கள் எல்லாரும் பின்பற்றணும்’.. மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மூன்று புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘3 புதிய கொள்கைகள்’!.. ‘இதை கட்சி தொண்டர்கள் எல்லாரும் பின்பற்றணும்’.. மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு..!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் தேர்தலுக்கு பின்னும் அக்கட்சி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அரசுக்கு ஆலோசனைகளும், வேண்டுகோள்களும் விடுத்து வருகிறார்.



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மூன்று புதிய கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, மேம்படுத்தப்பட்ட சமூக நீதி, அனைவருக்குமான அரசியல் நீதி, நிலையான பொருளாதார நீதி. இதனை கட்சி தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.Makkal Needhi Maiam party announces 3 new policies

Makkal Needhi Maiam party announces 3 new policies

முன்னதாக தேர்தலுக்கு பிறகு கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது பேசிய கமல், இனி உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்