‘பிரதமர் பேசுகிறார் என்றதும் அதிகம் எதிர்பார்த்தேன்’.. ‘ஆனால் நாம் என்றோ கையிலெடுத்த டார்ச்சுக்கே..!’ கமல்ஹாசன் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் என பிரதமர் மோடியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரையும் 9 நிமிடங்கள் லைட்டுகளை அணைத்து விளக்குகளை ஏற்ற வலியுறுத்தினார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்