'இது முடிவல்ல... ஆரம்பம் தான்'!.. தேர்தல் முடிவுக்கு பிறகு... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு கருத்து!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பை இழந்ததை அடுத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக, வானதி சீனிவாசன் 1,500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் யாவரும் சட்டமன்றதுக்குள் நுழைய முடியாமல் போனது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்