'இப்போ தான் நிம்மதியா வீட்டுக்கு போனோம்'...'மீண்டும் பூதாகரமாக வெடித்த காய்ச்சல்'...78 பேர் பாதிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிலைமை சற்று கட்டுக்குள் வந்த நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பூதாகரமாக வெடித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனா பல நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலக அளவில் 16,510 ஆக உயர்ந்து உள்ளது. இந்தசூழ்நிலையில் சீனாவில் மீண்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான உகான் மாகாணத்தில், கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. அதே நேரத்தில் சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து இருந்தது.

இந்நிலையில் சீனாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு 7 பேரின் உயிரை கொரோனா பலி வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 7 பேரின் மரணமும் ஹூபே மாகாணத்தில் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பிய 74 பேரின் மூலமாக காய்ச்சல் பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதன்முலம் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,171 ஆக உயர்ந்து உள்ளது.இதில் 73159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதோடு மொத்தமாக 3277 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. சீனாவில், கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

MAINLAND CHINA, CORONAVIRUS, INFECTIONS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்