நீங்க செய்த 'வேலைக்கு' நான் 'ஏதாவது' பண்ணியாகணுமே...! இந்த காலத்துல 'இப்படி' ஒரு நல்ல உள்ளமா...? 'நீங்க நல்லா இருக்கணும் சார்...' - இப்படி ஒரு 'சீட்டிங்' பார்த்ததே இல்லையே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிய காலத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து பல தன்னார்வலர்கள் சேவையை மேற்கொண்டனர்.
அதில் முக்கியமாக வடசென்னையில் இலவச ஆட்டோ ஆக்சிஜன் என்ற திட்டத்தின் மூலம் சேவை புரிந்த கடமை அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர் வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கவனிக்க வைத்தனர். இவர்களை டாக்டர் சந்திரசேகரன் சுப்பிரமணியன் என்ற பெயரிலான நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி தொடர்பு கொண்டுள்ளார்.
தான் ஐசிஎம்ஆர் நிறுவனத்தில் கொரோனோவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் தலைமை ஆராய்ச்சியாளராக இருப்பதாகவும், தங்களது சமூகப் பணியை டிவியின் மூலம் தெரிந்து கொண்டதாகவும் பாராட்டியுள்ளார்.
மேலும், இலவசமாக மாஸ்க் கிருமிநாசினி போன்றவற்றை அனுப்பி வைப்பதாகவும் அவற்றை மக்களுக்கு வழங்குமாறும் அந்த நபர் கூறியதை கேட்டு அவர் உண்மையிலேயே ஐசிஎம்ஆரில் பணிபுரியக்கூடிய ஆராய்ச்சியாளர் என்று தன்னார்வலர்கள் நம்பி உள்ளனர்.
பின்னர் மீண்டும் அழைத்த சந்திரசேகர் சுப்பிரமணியன் என்ற அந்த நபர், பிரபல மகேந்திரா கார் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் மருத்துவர்களுக்கு இலவசமாக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொலிரோ வாகனத்தை வழங்குவதாகவும், தங்களது சேவையை பார்த்து வியந்துபோன தான் அந்த வாகனத்தை உங்களுக்கு பரிசாக வழங்குவதாகவும் கூறியுள்ளார். அதற்கான விவரங்களையும், பொலிரோ காரின் படத்தையும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார். சேவை எண்ணத்துடன் ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த காரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க முன் வருகிறாரே என்று மகிழ்ச்சியடைந்த வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை அனுப்புவதற்கு ஒரு லட்சம் வரை வரி உட்பட சில கட்டணங்கள் செலுத்த வேண்டும் எனவும் அதற்கான வங்கி கணக்கு எண் ஒன்றை அனுப்புவதாகவும் கூறிய அந்த நபர் அதற்கான விவரங்களை எல்லாம் அனுப்பி உள்ளார். அந்த வங்கி கணக்கு எண் மகேந்திரா மெடிக்கல் பவுண்டேஷன் என்ற பெயரில் இருந்துள்ளது. அதை நம்பி முதலில் ஆயிரம் ரூபாயை அந்த வங்கி கணக்கில் வசந்தகுமார் செலுத்தியுள்ளார்.
அப்போது வங்கிகணக்கு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கரூர் வைசியா வங்கி கிளையில் இருப்பது தெரியவந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் பெயரில் இருந்த அந்த வங்கி கணக்கு தொடர்பாக அவருக்கு சந்தேகம் எழுந்ததால் இணையத்தில் சரி பார்த்தபோது மஹிந்திரா நிறுவனம் இதுபோன்ற மகேந்திரா மெடிக்கல் பவுண்டேஷன் என்ற பெயரில் இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் என தன்னைக் கூறிக்கொள்ளும் சந்திரசேகர சுப்பிரமணியன், தன்னார்வலர்களை மீண்டும் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுப்பிய ஆயிரம் ரூபாய் பணம் வந்துவிட்டதாகவும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய காரும் டெல்லியில் இருந்து புறப்பட்டு தற்போது பெங்களூர் வந்து அடைந்து விட்டதாகவும், முதற்கட்டமாக 27 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தினால் வாகனம் கையில் கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
உஷாரான வசந்தகுமார் அதற்கு பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் தேடிய போது சந்திரசேகர சுப்பிரமணியன் பெயரில் ஒரு மருத்துவரே ஐசிஎம்ஆர் குழுவில் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பல் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை... 'புதிய தளர்வுகளுடன்' ஊரடங்கு நீட்டிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!
- 'மூணாவது அலை வர்றதுக்கு ரொம்ப நாள்லாம் ஆகாது...' இப்படியே போச்சுன்னா வெறும் 'இத்தனை' வாரம் தான்...! - டெல்டா வைரஸ் குறித்து 'ஷாக்' தகவலை வெளியிட்ட எய்ம்ஸ் இயக்குனர்...!
- உங்கள 'இன்ஸ்டால்' பண்ண வைக்குறதுக்காக தான் 'அப்படி' நம்ப வைக்குறாங்க...! 'ஆக்சுவலா அவங்களோட பிளானே வேற...' - கடும் எச்சரிக்கை விடுக்கும் போலீசார்...!
- 'துபாய் போகும்போது அம்மா கூட'... 'ஆனா திரும்பி வரும்போது'... 'கையெடுத்து கும்பிட்ட தந்தை'.... விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'உருமாறிய கொரோனாவுக்கு எதிராக...' 'இந்த மருந்து சூப்பரா வேலை செய்யுது...' - ஒப்பதல் அளித்த மத்திய அரசு...!
- கோவிஷீல்டு 2ம் டோஸ் இடைவெளியை அதிகரித்தது ஏன்?.. பூதாகரமான சர்ச்சை!.. இடைவெளியை குறைக்க திட்டம்!?.. குழப்பத்தில் மக்கள்!
- 'கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோயைத் தொடர்ந்து...' 'அடுத்த கலர்' பூஞ்சை நோய்...! 'உறுதி செய்யப்பட்ட முதல் நபர்...' - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!
- ஜெட் வேகத்துல 'டெல்டா பிளஸ்' பரவிட்டு இருக்கு...! 'இந்த நேரத்துல ஊரடங்கை தளர்த்துறது பெரிய ஆபத்துல போய் முடியும்...' அதிரடி 'முடிவு' எடுத்த நாடு...!
- செய்ய வேண்டியத 'சிறப்பா' செய்தாச்சு...! 'இனி தைரியமா போய் பணம் எடுங்க...' -ATM செக்யூரிட்டியின் நம்பிக்கை...!
- ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே