கையில் தராமல் வீட்டு கேட்டில் தூக்கி எறியப்பட்ட பொருட்கள்.. ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் அளித்த நடிகர் மகத் ராகவேந்திரா! முழு தகவல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் மஹத் ராகவேந்திரா.

கையில் தராமல் வீட்டு கேட்டில் தூக்கி எறியப்பட்ட பொருட்கள்.. ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் அளித்த நடிகர் மகத் ராகவேந்திரா! முழு தகவல்
Advertising
>
Advertising

Also Read | "40 வருஷமா Waiting".. கைவிடாத முதியவருக்கு 88 வயதில் அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் கோடீஸ்வரர்!!

2011 ஆம் ஆண்டு அஜித் நடித்த மங்காத்தா படத்தில் மஹத் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார், பின்னர் நடிகர் விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சிம்பு நடித்த வல்லவன், காளை, AAA, VRV, மாநாடு, மஹா திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் ராகவேந்திரா பிக்பாஸ் சீசன் 2 போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர்.

Mahat Raghavendra shared a video on Twitter went viral

2020 ஆம் ஆண்டு, பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்ட மஹத்துக்கு அதியமான் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் டபுள் எஃக்ஸ் எல் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் மஹத் ராகவேந்திரா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் மஹத் ராகவேந்திரா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "அமேசான் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் பொருட்களை இப்படி தூக்கி எறிவதற்கு பதில், கதவு மணியை அடித்தால் அல்லது எங்களை அழைத்தால் நன்றாக இருக்கும். பொருட்களை கவனமாக வழங்கவும் :)" என ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்த நிறுவனம்,இந்த மோசமான  அனுபவத்திற்கு மன்னிப்புக் கேட்டு, டெலிவரி ஆர்டர் குறித்த விவரங்களை கேட்டு தீர்வளிப்பதாக உறுதியளித்துள்ளது.

Also Read | Azeem : “எல்லா வீக்கும் நாமினேட் பண்ணாங்க.. ஆனாலும் வீழ்வேனென்று நினைத்தாயோ” - பாரதியார் பாட்டை மேற்கோள் காட்டிய அசிம்

MAHAT RAGHAVENDRA

மற்ற செய்திகள்