அங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நடந்த பல செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சமீபத்தில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளிடம் இருந்து செயினை பறித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், செயின் பறிப்பு நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது அவை அனைத்திலும் இருசக்கர வாகனத்தில் வந்து செயினைப் பறித்து செல்லும் நபரின் முகம் சரியாகத் தெரியாமல் இருந்துள்ளது. ஆனாலும் சோர்ந்து போகாமல் விசாரணையைத் தொடர்ந்த போலீசாருக்கு செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த அந்த நபர் டிப்டாப்பாக உடை அணிந்து ஒரு டீக்கடை முன் நிற்கும் சிசிடிவி கேமரா பதிவு ஒன்று கிடைத்துள்ளது.

அந்த சிசிடிவி பதிவை வைத்து அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த சென்னை போலீசார் அவருடைய புகைப்படத்தை வடமாநில போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வடமாநில போலீசார் மற்றும் தெலுங்கானா போலீசார் அளித்த தகவலின்படி, அமோல்பாலசாஹே சிண்டே (29) எனும் அந்த நபர்மீது மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 28க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் இருப்பதும், அவர் பலமுறை கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் விசாரணையில், ஹைதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்து அந்த நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டு பிறகு மீண்டும் விமானத்தில் திரும்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து அவரைக் கண்காணித்து வந்த போலீசார், சென்னை வந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை வழிமறித்து கைது செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் சிண்டே, “மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நான் செயின் பறிப்பில் மிகவும் பேமஸாகிவிட்டேன். மேலும் தெலுங்கு, தமிழ் பேசும் பெண்கள் கழுத்தில் அதிக நகைகளை அணிவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் சென்னைக்கு வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

POLICE, CCTV, CHENNAI, MAHARASHTRA, CHAINSNATCHING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்