‘50 வயதைக் கடந்தவர்களுக்கு சிறப்பு ரூல்!’.. ‘கொரோனா தொற்றை சமாளிக்க’ மாநில அரசின் அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.

இந்தியா கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் 25வது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகளும் மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ராஜஸ்தான் அரசு தீவிரமான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அனைத்து மக்களும் அவற்றை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அடுத்த முக்கிய முடிவாக பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்களுக்கு செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கான தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி இந்த தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தற்போது மாநிலத்தின் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

CORONAVIRUSUPDATE, CORONAVIRUSOUTBREAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்