போலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு!.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரையின் சாலைகளில் போலீசாரின் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மதுரையில் பரபரப்பாக இயங்கும் முக்கியமான சாலையான காமராஜர் சாலையில் போலீசாரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட அந்த சூழலை பயன்படுத்தி, மதுரை முனிச்சாலை என்கிற பகுதியில் 20 வயதான நாகராஜ் என்பவரும் 17 வயதான சிறுவர் ஒருவரும் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பினை பயன்படுத்தி வாலிபால் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, பல கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்து இப்படி போலீசார் தடுப்பு வைத்திருந்தால் அந்த கட்டுப்பாடுகளை கேலியாக்கி அவ்வழியாக இயங்கிய அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக செயல்பட்டு, இவ்வாறு வாலிபால் விளையாடிய அந்த இளைஞர்களின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இதனை அடுத்து இதுகுறித்து அப்பகுதியில் சென்ற தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஊரடங்கை மதிக்காமல் அலட்சியமாக திரிந்த அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கு உத்தரவால்... 200 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி!'... வரும் வழியில் நிகழ்ந்த கோரம்... போலீஸார் உருக்கம்!
- சீனாவில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா படையெடுத்து வந்தது எப்படி!?... கொரோனா தொற்றின் பாதை விளக்கம்!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- “வேண்டிக்கிட்ட எல்லாத்துக்கும் இதயப்பூர்வ நன்றி!”.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவிக்கு நடந்த அந்த மேஜிக்!’
- 'வீட்டுக்குள்ள இருந்துட்டா போதும், ஈஸியா தடுக்கலாம்' ... '21 நாட்கள்' ஊரடங்கு ஏன்? ... தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன விளக்கம்
- ‘ஊரடங்கை மீறி வெளில வந்துராதீங்க!’... ‘அப்புறம் 14 நாள் இந்த தண்டனைதான்!’.. ‘அல்லு’ கிளப்பும் மத்திய அரசின் உத்தரவு!
- 'ஊரடங்கு உத்தரவுனால... சாப்பாடு இல்லாம யாரும் கஷ்டபடக்கூடாது!'... புதுக்கோட்டை விவசாயி செய்த பிரம்மிக்கவைக்கும் செயல்!... வீடு வீடாக நடத்திய அற்புதம்!
- கொரோனாவுக்கு பலியான முதல் ‘இளவரசி’! அரச குடும்பத்திற்குள் புகுந்த ‘ஆட்கொல்லி’ நோயால் நேர்ந்த சோகம்!
- 'கொஞ்சம் கஷ்டமான முடிவு தான் இது' ... 'எல்லாரும் என்ன மன்னிச்சுக்கோங்க' ... ஊரடங்கிற்கு பின் முதல் முறையாக மோடி பேசியது என்ன?
- VIDEO: "பொதுமக்கள ஏன் சார் அடிக்குறீங்க?... கமல் வீட்ல ஏன் நோட்டீஸ் ஒட்டுனீங்க?... கொரோனா டெஸ்ட் சரியா எடுக்குறீங்களா?"... அமைச்சர் ஜெயக்குமாருக்கு சரமாரி கேள்விகள்... அனல் பறக்கும் விவாதம்!
- பட்டினியால் இறப்பதைவிட சொந்த ஊருக்கே போறோம்... கோயம்பேட்டை மிஞ்சி... டெல்லி பேருந்து நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழிலாளர்கள்... அதிரவைக்கும் வீடியோ!