‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ இளைஞர்... ‘தேடிப்பிடித்த’ போலீசாருக்கு ‘அடுத்தடுத்து’ காத்திருந்த அதிர்ச்சி... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளைஞர் மைனர் சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 23ஆம் தேதி துபாயில் இருந்து சிவகங்கையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் மதுரை திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென அவர் காணாமல் போக, மதுரை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வந்துள்ளனர். இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் சிவகங்கை அருகே நேற்று மதியம் ஒரு பெண்ணுடன் வைத்து அவரைப் பிடித்துள்ளனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காதலித்த பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததும், அதை அறிந்த அவர் அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்று திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை கொரோனா கண்காணிப்பு முகாமில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் அந்த சிறுமியையும் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாப்பாடு இல்லாம எப்படி சார் உயிர் வாழ முடியும்...? 'நாங்க ஊருக்கு போகணும்...' கேரளாவில் மாட்டிக்கொண்ட கட்டிட தொழிலாளர்கள்...!
- ‘இப்படிலாம் பண்ணா’... ‘டிக் டாக் பந்தயத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘இறுதியில் நடந்த துயரம்!
- ‘24 வயது’ இளைஞருக்கு கொரோனா... தமிழகத்தில் ‘27 ஆக’ உயர்ந்துள்ள பாதிப்பு... ‘அமைச்சர்’ தகவல்...
- 'மதுரையில்' கொரோனாவுக்கு இறந்தவரின் 'இறுதிச் சடங்கு'... வெறும் '4 பேருக்கு' மட்டுமே 'அனுமதி'... தெரு முழுவதும் 'தடுப்புகள்' ... 'உருக வைக்கும் சோகம்'
- ‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்!
- கூடிய சீக்கிரம் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விடும்...! 'சீனாவின் நிலைமையை முன்கூட்டியே கணித்து சொன்னவர்...' நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்பிக்கை...!
- கொசு கடிச்சா கொரோனா பரவுமா?.. மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!
- ஒற்றை ‘கிருமி’ உலகம் முழுவதும் ‘பரவும்’... முன்பே ‘கணித்த’ மைக்கேல் ஜாக்சன்... ‘ரகசியத்தை’ பகிர்ந்த ‘பாடிகார்டு’...
- ‘இந்த நேரத்துல அத பண்ணா.. தப்பான முன்னுதாரணமாகிடும்’.. துணை கலெக்டர் எடுத்த முடிவு..!
- 'கொரோனாவை வென்று வீடு திரும்பிய குடும்பம்!'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்!... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்!