'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உசிலம்பட்டியை சேர்ந்த இளம் பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம் பெண் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். அவருக்கு இடை விடாத இருமல், சளி தொந்தரவு ஏற்பட தனது ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பும் அந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்ததால், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து இளம்பெண்ணை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. நுரையீரல் நோய் தடுப்பு மருத்துவர்கள் அந்த பெண்ணை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த பெண்ணின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கும் அந்த பெண்ணிற்கு, கொரோனா தாக்குதல் அறிகுறி இருந்தால் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா'வுல இருந்து நம்மள காப்பாத்திட்டு இருக்காங்க ... இவங்க தான் ரியல் ஹீரோக்கள் ... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #CoronaFighters!
- 'இது தமிழ்நாடு பா' ... 'உள்ள வந்தா உன்ன சாவடிச்சுருவோம்'... கொரோனா வைரசிற்கு எச்சரிக்கை விடுத்த தமிழக 'சட்டமன்ற உறுப்பினர்'!
- இந்தியாவில் 3-வது 'உயிரைப்' பறித்தது கொரோனா... தொடர்ந்து உயரும் 'பலி' எண்ணிக்கையால்... மக்கள் அச்சம்!
- பரவலாகி வரும் கொரோனா வைரஸ் ... 'தாஜ்மஹால்' க்ளோஸ் ... மத்திய சுற்றுலா அமைச்சகம் எடுத்த முடிவு !
- இந்தியாவில் 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ? ... மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்
- முதியவர்களை தாக்கிய கொரோனா ... அசத்திய ராஜஸ்தான் மருத்துவர்கள் ... பயன்படுத்திய மருந்து என்ன ?
- 'ஊடக மக்களே, பேட்டி எடுக்காதீங்க' ... 'மைக்' மூலமா கொரோனா பரவுதாம் ... கேரள அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு !
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- கொரோனா விஷயத்துல... 'தனியார்' மையங்கள் கண்டிப்பா 'இதை' செய்யக்கூடாது... 'தமிழக' அரசு உத்தரவு!
- பர்ஸ்ட் 'பூத்'ல போங்க ... அடுத்து உங்க வேலைய பாருங்க ... கொரோனாவைத் தடுக்க கேரள அரசின் 'பிரேக் தி செயின்'!