என் மனைவி எங்க...? 'மூணு வருசமா வலைவீசி தேடிய கணவன்...' 'சென்னையில் இருந்து கிடைத்த துப்பு...' 'இவங்களா' என் மனைவி...? - அதிர்ந்து போன கணவன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் 3 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன திருமணமான பெண் ஒருவரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் கீழப்பனங்காடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். சரவணனுக்கும், ஜெயஸ்ரீக்கும் 2019-ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்காரணமாக அலங்காநல்லூர் காவல் நிலையத்திலும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜெயஸ்ரீயை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஒரு வருடமாகியும் மனைவியை கண்டுபிடித்து தராததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கணவர் சரவணன் கடந்த வருடம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜெயஸ்ரீயை மதுரை மாவட்ட போலீசார் வலைவீசி தேடியுள்ளனர்.

அப்போது தான், ஜெயஸ்ரீ சென்னையில் வீடு எடுத்து வசிப்பதும், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று ஜெயஸ்ரீயை கண்டுபிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஜெயஸ்ரீ திரும்நம்பியாக மாறியது தெரியவந்தது.

மேலும், தனது 12-ஆம் வகுப்பு பள்ளித் தோழியான துர்காதேவி என்ற பெண்ணுடன் இணையர்களாக வாழ்ந்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. ஜெயஸ்ரீயை கண்டுபிடித்ததை தொடர்ந்து, இருவரையும் மதுரை அழைத்து வந்த போலீசார் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும், கணவர் சரவணனுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு ஜெயஸ்ரீ கூறுகையில், “பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் போதே நானும் துர்காதேவியும் உயிருக்கு உயிராக காதலித்தோம். துர்காதேவியுடன் இணைந்து வாழ விரும்பி, நான் திருநம்பியாக மாறினேன். சென்னையில் தனியாக வீடு எடுத்து அங்கேயே தங்கி உணவகத்தில் வேலை பார்த்து வருகிறேன். கணவருடனும், குடும்பத்துடனும் செல்ல எனக்கு விருப்பம் இல்லை” எனக்கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி வாழ அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்