‘பிரேத பரிசோதனையின்போது’ அதிர்ந்த மருத்துவர்கள்.. ‘மாட்டிக்கொண்ட பிறகு’ மனைவி கொடுத்த ‘பரபரப்பு’ வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு 34 வயதான சுந்தர் (எ) சுதிர் என்கிற மகன் இருந்தார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு அருள்செல்வி என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்கிற மகள் உள்ள நிலையில் சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்திருந்தார். அருள்செல்வியும் திருமங்கலம் அருகே உள்ள கீழ்செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கட்டிலில் இருந்து சுந்தர் கீழே விழுந்து மயங்கியதாகக் கூறி அவரை அவரது குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய உயிர் தளத்தில் ரத்தம் இருப்பதாக கூறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் சுந்தரின் மனைவி அருள்செல்வியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அருள்செல்வி உண்மையை கூறியுள்ளார். அதன்படி தனது கணவர் அடிக்கடி தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை, தான்தான் அடித்துக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் பிரேத பரிசோதனை முடிவில் சுந்தர் எப்படி இறந்தார் என்பது தெரியும் என்பதால் அதில் வரும் தகவலை வைத்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்த உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்