'ஹலோ நேத்ராவா'... 'வீடு தேடி வந்த அழைப்பு'... 'மதுரை சலூன்' கடைக்காரரின் மகளுக்கு கிடைத்த கெளரவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகளின் படிப்பிற்காகச் சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காகச் செலவிட்டு பிரதமரின் பாராட்டைப் பெற்ற மதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.

Advertising
Advertising

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், உணவிற்காகக் கஷ்டப்படுவோர் மற்றும் ஏழைகள் எனப் பலருக்கும் தங்களால் முடிந்த உதவிகளைப் பலரும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். சலூன் கடை நடத்தி வரும் இவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காகத் தனது மகள் நேத்ராவின் படிப்புக்காகச் சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயைச் செலவிட்டுள்ளார்.

இந்த தகவல் பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது தான் தனது கனவு எனத் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனது எதிர்கால கல்விக்காகச் சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை, ஏழைகளுக்காகச் செலவிட்ட நேத்ராவை பாராட்டும் வகையில் இந்த கெளரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்