'போலீஸ் ஸ்டேஷன்ல ஜாயின் பண்ணின உடனே...' மொத வேலையா 'வெளிய' வைக்கப்பட்ட போர்டு...! - காவல் ஆய்வாளரை பாராட்டும் பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போலீஸ் ஆய்வாளராக இருந்தவர் ஆனந்த தாண்டவன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருடைய இடத்திற்கு சரவணன் என்பவர் ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்த நிலையில், பணியில் சேர்ந்ததும் முதல் வேலையாக அந்த போலீஸ் ஸ்டேஷனில் வெளியில் போர்டு ஒன்றை வைத்துள்ளார்.

அந்த போர்டில், ‘‘ ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பி. சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதில்லை. என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்கவேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என, தெரிவிக்கிறேன்,’’ என அதில் எழுதப்பட்டுள்ளது.

போலிஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு போர்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் அந்த ஆய்வாளர் மேல் பெரிய மதிப்பு உருவாகியுள்ளது. போலீசாரிடமும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது..

இதுபற்றி மதுரை காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ”காவல் நிலையங்களில் லஞ்சம் ஒழிப்பு பலகையை வைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. அதன்படி அனைத்து காவல் நிலையங்களில் இந்த அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்டேஷனில் சற்று வித்தியாசமாக தனது பெயரை குறிப்பிட்டு வைத்துள்ளார். இது ஒரு நேர்மறையான செயல்தான்” என்று பாராட்டியுள்ளார்.

MADURAI, BRIBES, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்