MBBS படிச்சிட்டாம்மா ‘பிச்சை’ எடுத்துட்டு இருக்க..! சர்டிஃபிகேட்டை பார்த்து ‘ஷாக்’ ஆன போலீஸ்.. மனதை ரணமாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் டாக்டருக்கு படித்துவிட்டு திருநங்கை ஒருவர் ஆதரவற்று சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் கவிதா போலீஸ் வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது ரயில் நிலைய சாலையோரம் இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற திருநங்கைகள் சிலர் போலீஸ் வாகனத்தை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் திருதிருவென விழித்துக்கொண்டு ஓடாமல் நின்றுள்ளார்.

அந்த திருநங்கையை மீட்ட காவல் ஆய்வாளர் கவிதா, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். அப்போது காவல் ஆய்வாளரிடம் அந்த திருநங்கை சரளமாக ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மகேஸ்வரன் என்ற பெயரில் எம்.பி.பி.எஸ் படிப்பை அவர் முடிந்துள்ளார்.

இதன்பின்னர் தனக்குள் இருந்த பெண்மை உணர்வால் தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொண்டு திருநங்கையாக மாறியுள்ளார். தான் திருநங்கையாக மாறிய விவரம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிந்ததும் பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வாடகைக்கு வீடு கிடைப்பது தொடங்கி, ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் தவறான நண்பர்களின் தொடர்பால் யாசகம் கேட்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால் அவர் பொய் சொல்கிறாரோ என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். உடனே தனது மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ்களை திருநங்கை எடுத்துக் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் அதிர்ந்துபோயுள்ளனர். உடனே இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு காவல் ஆய்வாளர் கவிதா தகவல் தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி திருநங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி தொண்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் திருநங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிக் கொடுத்ததோடு, கிளினிக் நடத்துவதற்கும் ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார். எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு சாலையில் யாசகம் கேட்டு திரிந்த திருநங்கைக்கு உதவிய மதுரை காவல் ஆய்வாளர் கவுதாவுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்