'போன தடவ கரண்ட் பில் 260 ரூபாய் தான் வந்துச்சு...' இந்த மாசம் 'எவ்ளோ' வந்துருக்கு...? - அதிர்ச்சியில் உறைந்த 'வாடகை' வீட்டுக்காரர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவில் ஒன்றரை ஆண்டாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ரியாஸ். கல்வி ஆலோசகராக பணியாற்றி வரும் இவருக்கு கடந்த ஜூலை மாதம் மின் கட்டணமாக ரூ.11,352 வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரியாஸ் மற்றும் அவரின் குடும்பத்தார் தெப்பக்குளம் துணை மின் நிலையம் சென்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ரியாஸ் கூறுகையில், 'நான் உயர் கல்வி கற்க நினைக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறேன். இதன் மூலம் எனக்கு மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள்தான் வருகிறது.
இந்த கொரோனா ஊரடங்கால் எங்களின் குடும்பமும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதத்தில் ரூ.680 கட்டணமும், மே மாதத்திற்கு ரூ.260 கட்டணமும் செலுத்தினேன்.
ஆனால் இந்த ஜூலை மாதத்தில் எனக்கு ரூ.11,352 கட்டணமும், டெபாசிட் தொகை ரூ.390 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது' என கூறியுள்ளார்.
அதோடு, தெப்பக்குளம் துணை மின் நிலையம் சென்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கேட்டாலும் சரியான பதில் தர மறுப்பதாகவும், மின்வாரிய உயரதிகாரிகளுக்கு ஆன்லைனில் புகார் தெரிவித்து 4 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடுள்ளார்.
மேலும், 'என்னுடைய இந்த நிலை குறித்து தமிழக அரசின் மின்னகத்திற்கும், மின்சாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கும் புகார் அனுப்பியுள்ளேன். மின் மீட்டரில் தவறா, கணக்கீட்டில் தவறா எனத் தெரியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும்' என ரியாஸ் கூறியுள்ளார்.
அதோடு, தெப்பக்குளம் மின்நிலைய உதவிப் பொறியாளர் வடிவேல்குமார் அவர்கள் இந்த சம்பவம் குறித்து கூறும்போது, 'இந்த கொரோனா காலத்தில் மின் கணக்கீட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் நடந்துள்ளன. ரியாஸ் அவர்களுக்கு நடந்த சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் மீட்டரில் குறைபாடு இருந்தாலும் சரி செய்து தரப்படும்' எனவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மின் கட்டண பில் (EB Bill) ஷாக் அடிக்க வைக்கிறதா?.. அதிக கட்டணத்தை சரி செய்யும் வழி 'இது' தான்!.. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!
- டேஸ்ட் 'நாக்குல' ஒட்டிடுச்சு...! 'ஆறு மாசமா கரெக்டா அந்த நேரத்துக்கு வந்திடும்...' - ஹோட்டல் உரிமையாளரின் மனித நேயம்...!
- பிச்சை எடுக்குறவரோட 'பேங்க்' அக்கவுண்ட்ல எப்படி ரூ. 56 லட்சம் பணம்...? ஆக்சுவலா 'இவரு' யாரு...? - தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...!
- ‘என்ன சத்தம் அது’!.. பைக் சீட்டை கழற்றிய டாக்டர்.. ‘இனி கொஞ்ச நாளைக்கு வண்டியை எடுக்கக் கூடாது’.. நெகிழ வைத்த ‘மதுரைக்காரர்’-ன் மனித நேயம்..!
- 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வச்சுருக்கவரா 'இப்படி' பண்ணினாரு...? 'ஸ்பாட்டுக்கு போய் சோதனை நடத்திய அதிகாரி...' - தெரிய வந்த 'அதிர' வைக்கும் உண்மை...!
- 'தோள் கொடுக்க தாய் தந்தையர் இல்லை'!.. 'ஓடத் துடிக்கும் கால்களுக்கு ஷூ இல்லை'!.. ஓடி ஓடியே ஒலிம்பிக்-ஐ அடைந்த அசாத்திய கனவு!.. யார் இந்த ரேவதி?
- "தமிழகம் முழுவதும் உள்ள மின் அளவீட்டுக் கருவிகளில் 'புதிய' மாற்றம்"!.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு!
- 'மக்களே கவலை வேண்டாம்'... 'மின் கட்டணம் செலுத்த இந்த தேதி வரை கால அவகாசம்'... தமிழக அரசு அறிவிப்பு!
- 'மே மாதத்திற்கு கரண்ட் பில் வரவில்லையா'?... 'கவலை வேண்டாம்'... பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!
- 'அங்க கேரளால பண்ணியிருக்காங்க பாருங்க...' 'அதேப்போல நம்ம தமிழ்நாட்டுலையும் பண்ணனும்...' 'அப்படி பண்ணா' மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...! - சீமான் அறிக்கை...!