'அப்பா, அம்மாவால் ஆசிரியரான மகன்!'.. வீட்டை விட்டு விரட்டியதால் 'சுடுகாட்டிற்கு' சென்று 'கழுத்தை' அறுத்துக்கொண்ட 'வயதான பெற்றோர்'!.. 'போவதற்கு முன்' செய்த 'உருக்கமான' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மேலூர் அருகே, பெற்ற மகன் வீட்டை விட்டு துரத்தியதால், விரக்தி அடைந்த தாயும் தந்தையும் சுடுகாட்டுக்கு சென்று கழுத்தையும் மற்றும் கையையும் அறுத்துக்கொண்டதில், தந்தை உயிரிழந்த நிலையில், தாய் உயிருக்கு போராடி வரும் பரிதாப சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் சுடுகாட்டுக்கு அருகில் சாலையோரம் வயதான தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு 108 ஆம்புலன்சுடன் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அருகில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த அவரது கணவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  முதற்கட்ட விசாரணையில் இறந்து போனவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த 63 வயது முதியவர் பாண்டியராஜன் என்பதும் உயிருக்குப் போராடிய அந்த மூதாட்டி பாண்டியராஜனின் மனைவியான கமலம் என்பதும் தெரியவந்தது.

மேற்கொண்டு விசாரித்ததில் இவர்களது மகன் சதீஷ்குமார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார் என்பதும், பத்தாம் வகுப்புத் தேர்வில் சிங்கம்புணரி அரசு பள்ளியில் முதல் மாணவனாக 480 மதிப்பெண் பெற்ற சதீஷ்குமார் படிப்பில் படு சுட்டியாக இருந்ததை அடுத்து, நல்ல வேலை, அதே ஊரை சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது என சகல சௌபாக்கியங்களுட்டனும் வாழ்ந்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

முதியவர் பாண்டியராஜன் தனது மகளை கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத மருமகன் மகளிடம் சீர்கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்தியதால் வேதனை அடைந்துள்ளார். மேலும் தனது மகளுக்கு சீர் பொருட்களை கொடுக்கச் சொல்லி பாண்டியராஜன் தனது மகன் சதீஷ்குமாரிடம் பலமுறை கேட்டதை அடுத்து, சதீஷ்குமார் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு ஆவேசமாக பேசி தாய், தந்தை இருவரையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி கத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பாண்டியராஜன், பழைய சைக்கிளில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மருமகனால் துன்புறுத்தப்படும் மகளின் வீட்டிற்கும் செல்ல முடியாமல், மருமகளின் கட்டுப்பாட்டிலுள்ள மகனையும் திரும்பி பார்க்க விரும்பாமல், யாருக்கும் பாரம் இன்றி சுடுகாட்டில் சென்று ஒருவருக்கு ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவு செய்து இந்த விபரீத முடிவை இந்த தம்பதியர் எடுத்திருக்கலாம் என்றும் போலீஸார் குறிப்பிடுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறுவதற்குமுன் இந்த தம்பதியினர் தாங்கள் சேர்த்து வைத்து இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும், தங்களிடம் இருந்த நகைகளையும் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என மகனிடம் கூறும்படி சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர் என்பதுதான் இதில் இன்னும் கலங்கவைக்கும் சோகம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்