'மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...' 'இன்று (மே.4) காலை 8.30க்கு தொடக்கம்...' 'எதில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தெரியுமா?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே 4 ) காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அத்துடன், திருக்கோயிலின் முகநூல் பக்கத்திலும், youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இந்த வைபவத்தின்போது, காலை 9:05 முதல் 9:29 மணிக்குள், தாய்மார்கள் மங்கள நாண் மாற்றிக்கொள்ள உகந்த நேரமாகும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதியவர் கொலையில்' தெரியவந்த அதிரவைக்கும் 'உண்மைகள்'!.. 'மகன் மற்றும் மருமகளின்' நாடகம் 'அம்பலம்'!
- ‘தொப்புள்கொடி ஈரம் கூட காயல’.. ‘இத பண்ண எப்டி மனசு வந்தச்சோ’.. வைகை ஆற்றின் நடுவே நடந்த கொடூரம்..!
- மருந்து வாங்க போனவருக்கு ‘இப்டியா’ நடக்கணும்..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- ‘கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள் கூட்டம்’.. மூடப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல்.. காரணம் என்ன?
- சென்னை, மதுரை உட்பட... 5 மாநகராட்சிகளில் முழு 'ஊரடங்கு'... தமிழக முதல்வர் உத்தரவு!
- 'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார்'.. 'கொல்கத்தா சென்று வந்த சென்னை பெண்மணி'.. கொரோனாவுக்கு பலியான இருவர்!
- ‘தனிப்படை’ அமைத்து வீட்டுக்கே சென்று உதவி.. மதுரை காவல்துறையின் அசத்தல் ஐடியா..!
- "தங்கச்சிய பாக்கணும்னு அம்மா சொல்லிச்சு"... சகோதரியை அழைத்து வர பழுதான 'சைக்கிளில்'... 80 கிலோமீட்டர் 'பயணம்'... 'நெகிழ' வைத்த 'அண்ணன்'!
- தமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்?