என்னங்க 'இப்படி' வந்துருக்கீங்க...? வேற என்ன பண்றது சொல்லுங்க...? 'இனிமேல் எனக்கு இது தான் கதி...' 'கையில திருவோடு, காதுல பூவோடு வந்த நபர்...' - அதிர்ந்து நின்ற அதிகாரிகள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்தவர் எம்.பி.சங்கரபாண்டியன். இவரது வீட்டிற்கு நடப்பு மாதம் ரூ.3,890 மின்கட்டணம் வந்துள்ளது. வீட்டில் ஏசி இல்லை. மின்விசிறி, டிவி மட்டும் உள்ளன.

வழக்கமாக இவரது வீட்டிற்கு ரூ.500-க்கு உள் தான் மின் கட்டணம் வருமாம். இந்த நிலையில், கூடுதல் மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகமான மின் கட்டணத்தை குறித்து விசாரித்துள்ளார்.

ஆனால், அதிகாரிகள் நேரில் வந்து பார்க்குமாறு கூறியுள்ளனர். அதனால், சங்கரபாண்டியன், கையில் திருவோடு ஏந்தியும், காதில் பூ சுத்தியப்படியும் கையில் கோரிக்கை பதாகையை ஏந்தியவாறு மின்வாரிய அலுவலகத்திற்கு மின்கட்டணம் செலுத்த வநதுள்ளார்.

அதிகமான மின்கட்டணம் வந்ததிற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் நேரடியாக வந்து மின் பயன்பாட்டை அளவிட இயலவில்லை, எனவே மொத்தமாக அளவீடு செய்துள்ளோம்.’’ என்று கூறியுள்ளனர்.

அதனால், வேறு வழியின்றி சங்கரபாண்டியன், மின்கட்டணத்தை செலுத்திவிட்டு அதிகப்படியான மின்கட்டணத்தால் திருவோடு ஏந்தும் நிலைக்குத் தான் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மின்கட்டணம் கடந்த நான்கு மாதத்திற்கு சேர்த்து கணக்கெடுத்துள்ளதால் என்னுடைய வீட்டிற்கு ரூ.3,890 மின்கட்டணம் வந்துள்ளது. மின்வாரியம் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தி மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து அமல்படுத்த வேண்டும்.முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதை என்னை போன்ற சாதாரண மக்களிடம் சென்றடையும் வகையில் ஏன் விழிப்புணர்வு செய்யவில்லை. ’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்