'சுழற்றி அடித்த காளை '... 'அந்தரத்தில் பறந்த வீரர்'... 'இதுதான் எங்க ஜல்லிக்கட்டு'... தெறிக்க விடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும். அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், தை 2-ம் நாள் பால மேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும்.

பொங்கல் பண்டிகையான நேற்றுமுன்தினம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினமான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின்போது காளைகள் முட்டியதில் 96 பேர் காயம் அடைந்தனர். அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்க 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தார்கள். 641 காளைகள் களம் இறக்கப்பட்டன. இதில் 14 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த விஜய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

இதனிடையே மாடு பிடிக்க முயற்சித்த வீரர் ஒருவரை காளை ஒன்று சுழற்றி அடிக்கும் வீடியோ ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறது. பார்ப்பதற்கே பிரமிப்பை ஏற்படுத்தும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் காளையை அடக்க முயற்சித்தபோது அது அந்த இளைஞரை சுழற்றி அடிக்க, அவர் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

JALLIKATTU, MADURAI, TWITTER, STRIPS TAMER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்