பிறந்து ‘ஒரு மாதமே’ ஆன... ‘பச்சிளம்’ குழந்தைக்கு நேர்ந்த ‘கொடூரம்’... விசாரணையில் ‘பெற்றோர்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏடுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வைரமுருகன் - சௌமியா. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி வைரமுருகன் குடும்பத்தினர் குழந்தையை வீட்டின் முன் புதைத்துள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழ, அவர்கள் இதுபற்றி வி.ஏ.ஓ-விற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு வி.ஏ.ஒ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோரான வைரமுருகன், சௌமியா மற்றும் வைரமுருகனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் இரண்டாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையைக் கொலை செய்ததாக கூறி போலீசாரை உறைய வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து உசிலம்பட்டி தாசில்தார், டி.எஸ்.பி முன்னிலையில், அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர்.
மேலும் குழந்தையின் பெற்றோர் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையைக் கொலை செய்ததாக கூறியுள்ள போதிலும், பிரேத பரிசோதனை முடிவுக்குப் பின்னரே குழந்தை இறந்ததற்கான காரணம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைரமுருகன், சௌமியாவுடன் சேர்த்து இதில் தொடர்புடைய சிங்கத்தேவன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன் உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிகளவில் பெண் குழந்தைகளைக் கொல்லும் சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கொடூரம் தலை தூக்கியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போ...' 'ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் 11 இருந்துச்சு...' 'குழந்தையின் உடலைக் கண்டு அதிர்ந்து போன மருத்துவர்கள்...!
- ‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘காரில்’ ஏற்றியதைப் பார்த்து ‘அதிர்ச்சியடைந்த’ உறவினர்கள்... வழிமறித்து ‘அடித்து’ உடைத்ததால் ‘பரபரப்பு’... ‘காதல்’ கணவர் செய்த ‘கொடூரம்’...
- யாரு ஏரியால வந்து யாருடா 'துட்டு' கேக்குறது...? 'பங்கு... சம்பவம் பண்ணினாதாண்டா நமக்கு கெத்து...' தந்தை கண் முன்னே மகனுக்கு நடந்த பயங்கரம்...!
- விடிந்தால் 'திருமணம்' ... நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த 'மர்ம' நபர்கள்... அதிர்ச்சியில் உறைந்த 'மாப்பிள்ளை' குடும்பம்
- ‘அம்மாவ மண்ணைப் போட்டு மூடுனத பாத்தேன்’.. செப்டிக் டேங்க் அருகே தோண்டப்பட்ட குழி.. மகன் சொன்ன பகீர் தகவல்..!
- VIDEO: ‘சந்தையில் தனியாக நின்ற சிறுமி’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..!
- தூங்கும் பெண்கள் தலையில் ‘கல்லை’ போட்டுக் கொலை.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..!
- ‘சிங்கிளா வீட்ல தங்குறது குற்றம்.. தெரியும்ல? எடுங்க ரூ.5 ஆயிரம் அபராதம்!’.. ‘உறையவைத்த சம்பவம்!’
- 'இதுக்குத்தான் என்ஜினீயரிங் படிச்சியா'?... 'கதறிய குடும்பம்'... பேஸ்புக்கில் இளைஞர் செய்த அட்டுழியம்!