ISRO-க்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செஞ்ச முக்கிய ஹெல்ப்.. அமைச்சர் நேரில் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுக்கான மென்பொருளை தயாரித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களை அமைச்சர் நேரில் வாழ்த்தியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | விமானத்துல ஜன்னல் வழியா பயணி பார்த்த காட்சி.. நடு பாலைவனத்துல இது எப்படி வந்துச்சு..?.. புவியியலாளர்கள் சொல்லிய மிரளவைக்கும் உண்மை..!

விண்வெளித்துறையில் இந்தியா பல்வேறு முக்கிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ இதனை வித்தியாசமாக கொண்டாட இருக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ் எஸ் எல் வி ராக்கெட் ஏழாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கியுள்ளது.

சிறப்பு பணிகள்

இந்நிலையில், இந்த ராக்கெட் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள்  மென்பொருள்களை தயாரிப்பதற்காக தேர்வு செய்தது இஸ்ரோ.  இதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் தமிழகததில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கைக் கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்கான பயிற்சியை ஆன்லைன் பயிற்சியை இஸ்ரோவே வழங்கியுள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆர்டினோ ஐ இ டி என்ற மென்பொருள் தயாரிக்கும் பணியை ஆசிரியர்களுடன் உதவியுடன் முடித்திருக்கிறார்கள் இந்த மாணவிகள். இந்த மென்பொருள் வான்வெளி உயரம், தட்பவெட்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான ஆய்வில் மாணவிகள் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாணவிகள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சர் வாழ்த்து

இதனை தொடர்ந்து ஏழாம் தேதி ராக்கெட் ஏவுதலை காண இந்த 10 மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து உள்ளூர் மக்கள் பலரும் இந்த மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | 22 போர் விமானங்களை களத்தில் இறக்கிய சீனா.. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை.. பரபரப்பில் உலக நாடுகள்..!

DMK, MADURAI, MADURAI GOVERNMENT SCHOOL, STUDENT, ISRO ROCKET, CHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்