‘குடிபோதையில் பைக்கில் சென்ற இளைஞரின்’.. ‘நெஞ்சை துளைத்த கம்பி’.. ‘போராடி உயிர் கொடுத்த மருத்துவர்கள்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞரின் நெஞ்சை துளைத்த 4 அடி நீள கூர்மையான கம்பியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.

மதுரை வாடப்பட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவர் கடந்த வாரம் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது வாகனம் நிலைதடுமாறியதில் குருசாமி அருகில் இருந்த சாலை கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும் குழிக்குள் விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 அடி நீள கூர்மையான கம்பி ஒன்று அவரது நெஞ்சுப் பகுதியில் துளைத்து முதுகுக்குப் பின்னால் வந்துள்ளது.

விபத்தில் சிறுகாயம் ஏற்பட்ட அவருடைய நண்பர் இதைப் பார்த்து அதிர்ந்துபோய் அங்கிருந்த மக்களிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர் உடனடியாக அவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய முதலுதவி அளிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்தக் கம்பி அவரது உடலிலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்கள், “அந்த இரும்புக் கம்பி மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளங்களான கழுத்து பெரு நரம்பு மற்றும் தமனிகளையும் துளைத்துவிட்டது. அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர், நரம்புமண்டலச் சிறப்பு அறுவை நிபுணர் என ஒட்டுமொத்த மருத்துவர்களின் கூட்டு முயற்சியே இந்த சிகிச்சையின் வெற்றிக்குக் காரணம். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குருசாமி தற்போது நலமாக உள்ளார். அங்கிருந்த மக்கள் அவரைக் குத்தியிருந்த கம்பியை எடுக்காதது அவருடைய அதிர்ஷ்டம்.” எனக் கூறியுள்ளனர்.

MADURAI, GOVERNMENT, HOSPITAL, DOCTORS, DRUNKEN, ROD, CHEST, NECK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்