"கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக"... "தனி வார்டு" அமைத்த மதுரை அரசு மருத்துவமனை!...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை ராஜாஜி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கென பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது.
இந்நிலையில், சீனாவில் இருந்து வருவோரை கண்காணிக்க நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அங்கிருந்து வருவோரையும் முழுவதுமாக பரிசோதித்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோன வைரஸ் பாதிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் 8 படுக்கைகள் அமைக்கப்பட்டதுடன், சிறப்பு சிகிச்சை அளிக்க 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மாணவர்கள், செவிலியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எங்க ஊருக்கு பஸ் வசதி வேணும்!"... "கிராமசபையை அதிரவைத்த 5ம் வகுப்பு சிறுமி!"... "பரிசளித்து பாராட்டிய எம்.பி"... "மக்கள் கொண்டாட்டம்"...
- 'அட பாவிங்களா.. ஒரு முகமூடி இவ்வளவு விலையா..?' 'அப்படினா வேற வழியே இல்ல...' இவ்ளோ அபராதம் கட்டியே ஆகணும்...!
- “அசைவத்தால் பரவும் கொரோனா வைரஸ்!” .. “2 மணி நேரம்தான் இருக்கு!”.. “பதறும் இந்திய மாணவர்!”.. பதட்டத்தின் உச்சத்தில் வுஹான்!
- பீதியை கிளப்பும் 'கொரோனா' வைரஸ்... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் '51 பேர்'... "இது எப்ப நடந்தது..."
- "அடிபணியுமா கொரோனா வைரஸ்?"... "ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய ஃபார்முலா!"...
- VIDEO: "கொரோனா வைரஸுக்கு சவால் விடும் சென்னை மருத்துவர்!"... "மருந்தை ஆய்வு செய்யவிருக்கும் சுகாதாரத்துறை!!"... "அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பால் பரபரப்பு!"...
- ‘கொரனோ வைரஸ் பாதிப்பு’.. அவசர அவசரமாக கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த ஆப்ரேஷன்..!
- தூக்குப்போடுவது எப்படி? என்று 'மனைவியிடம்'... நடித்துக்காட்டிய 'புதுமாப்பிள்ளை'க்கு... நேர்ந்த விபரீதம்!
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ‘ஸ்கூல் வேன்’.. 20 மாணவர்கள் படுகாயம்..!
- 'கொரோனா' வைரஸ் அபாயம்: 'சீனா'வில் இருந்து 'கோவை' வந்த 8 பேருக்கு... 'கல்யாணம்', காது குத்துகளில் கலந்துகொள்ள தடை!