42 வயதில் சிறையில் இருந்தபடி 11 ஆம் வகுப்பு பரீட்சை எழுதிய பெண் கைதி.. மார்க்கை கேட்டா அசந்துபோய்டுவீங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண் சிறைக் கைதி ஒருவர் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "புருஷன் சவூதி போய்ட்டாரு.. இப்போதைக்கு வரமாட்டாரு"... மனைவி போட்ட பக்கா பிளான்.. 5 வருஷம் கழிச்சு ஆசையா ஊருக்கு வந்த கணவருக்கு காத்திருந்த ஷாக்..!

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற்றுவந்த நிலையில் பதினோராம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தது. அரியர் முறைப்படி நடத்தப்படும் இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் இதையும் சேர்த்து எழுத வேண்டும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினார்கள். இவற்றுள் சிறை கைதிகளும் அடக்கம்.

சிறை வளாகங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் கைதிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி தமிழ்நாடு முழுவதும் 90.07% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். வழக்கம்போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.86 சதவீதமாகவும் உள்ளது.

93 சதவீதம்

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மதுரை சிறையை சேர்ந்த 16 ஆண் சிறைக் கைதிகளும், ஒரு பெண் என 17 பேர் எழுதியிருந்தனர். அதில் 16 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 42 வயதான அமுத செல்வி என்கிற பெண் சிறைக் கைதி 600க்கு, 557 மதிப்பெண் பெற்று அனைவரையும் திகைப்படைய செய்திருக்கிறார். அதாவது 93 சதவீத மதிப்பெண்களுடன் அமுத செல்வி தேர்ச்சியடைந்துள்ளார்.

அமுத செல்வி 5 பாடங்களில் 90க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதேபோல, 27 வயதான ஆண் கைதி அருண் என்பவர் 600க்கு 538 மதிப்பெண் பெற்று 90 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

சிறையில் இருந்தபடியே தேர்வெழுதி அமுத செல்வி மற்றும் அருண் ஆகியோர் அதிக மதிப்பெண்களை எடுத்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Also Read | திடீர்னு பதவியை ராஜினாமா செய்த முகேஷ் அம்பானி.. புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி தேர்வு..!

MADURAI, MADURAI FEMALE PRISONER, 11TH EXAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்