இறந்த பெண்ணின் உடலுடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்.. காரணத்த கேட்டு நடுங்கிய அக்கம் பக்கத்தினர்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை எஸ்.எஸ் காலனி, கண்ணகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மாலதி. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | தோல்வி அடைந்த இந்திய அணி... Retirement குறித்து சுனில் கவாஸ்கர் சொன்ன பரபரப்பு கருத்து!!

தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரது இரண்டு மகன்களில் மூத்தவரான ஜெய் சங்கர் என்பவர் மருத்துவ படிப்பை முடித்துள்ள நிலையில், இரண்டாவது மகன் சிவசங்கர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கடந்த வாரம் பாலகிருஷ்ணனின் மனைவி மாலதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும் மாலதியை சேர்த்துள்ளனர். ஆனால், அங்கே சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார் மாலதி.

இதனைத் தொடர்ந்து மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர், உறவினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர, அவர்களும் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இது பற்றி போலீசார் வந்து விசாரித்த போது உறவினர்கள் வர கால தாமதம் ஆவதாகவும் முதலில் தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாகியும் மாலதி உடலை அடக்கம் செய்யாமல் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வைத்திருந்ததால் மீண்டும் அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். அதே போல, மாலதியின் உடலை போலீசார் எடுத்து செல்லும் படி கேட்டுக் கொண்ட போதும் விபரீத முடிவை எடுத்து விடுவதாக பாலகிருஷ்ணன் மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனையடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்த பிறகு, மாலதியின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதிக்கு குடும்பத்தினர் எடுத்து சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதன்படி, இறந்த மாலதியின் உடலை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்த பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு மகன்கள் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் மூன்று நாட்களாக இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்துக்களாக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் அண்மைக் காலமாக மாற்று மத வழிபாடுகளை பின்பற்றி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினரால் தகவல்கள் கூறப்படுகின்றன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | கை நழுவி போன உலக கோப்பை வாய்ப்பு.. வெளியேற பிறகு உருக்கத்துடன் விராட் பகிர்ந்த ட்வீட்!!

MADURAI, FAMILY, WOMAN, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்