‘என்ன சத்தம் அது’!.. பைக் சீட்டை கழற்றிய டாக்டர்.. ‘இனி கொஞ்ச நாளைக்கு வண்டியை எடுக்கக் கூடாது’.. நெகிழ வைத்த ‘மதுரைக்காரர்’-ன் மனித நேயம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அணிலுக்காக ஒரு மாதம் பைக்கை ஓட்டாமல் இருந்த மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகே கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர் மெரில்ராஜ். கால்நடை மருத்துவரான இவர், வெளியே செல்வதற்காக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கை எடுக்க வந்துள்ளார். அப்போது அணில் ஒன்று பைக்கை சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இதைக் கவனித்த மெரில்ராஜ் திகைத்து நின்றுள்ளார்.

அந்த சமயம் பைக் சீட்டுக்கு அடியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே திறந்துப் பார்த்தபோது உள்ளே அணில் குட்டிகள் இருந்துள்ளன. அப்போது ஒரு குட்டி தவறி கீழே விழுந்ததும், தாய் அணில் அதை வாயில் கவ்வி மீண்டும் பைக்கின் சீட்டுக்கு அடியிலேயே வைத்துள்ளது.

இதனால் அணில் குட்டிகள் வளரும் வரை பைக்கை எடுக்க வேண்டாம் என மெரில்ராஜ் முடிவெடுத்துள்ளார். அதன்படி ஒரு மாதம் அந்த பைக்கை உபயோகிக்காமல் மாற்று பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அணில் குட்டிகளுக்காக மருத்துவர் மெரில்ராஜ் செய்த இந்த மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்