தந்தையர் தினத்தன்று... மகன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அப்பா!.. மனதை உலுக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக தந்தையர் தினத்தன்று மகன் கண்முன்னே அரசுப் பேருந்து மோதி தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி படிப்பு படித்து வருபவர் சதீஷ்குமார். இவர் இன்று தனது சொந்த ஊர் அடிக்கம்பட்டியில் இருந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளனர். உடன் கூடவே அவரது தந்தை கணேசன் (வயது 55) மற்றும் தாயும் TVS XL வாகனத்திலும் மற்றொரு வாகனத்தில் வந்துள்ளனர்.

இந்நிலையில், கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப அச்சம்பத்து அருகே வலதுபுறம் இண்டிகேட்டரை போட்டு பெட்ரோல் நிலையம் செல்ல முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து தேவாரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மனைவிக்குத் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

விடுமுறை நாள் என்பதால் வாகன நெரிசல் அதிக அளவு இல்லாததால் பேருந்து வேகமாக வந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் மகன் கண்முன்னே தந்தை விபத்தில் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்