‘வேறலெவல்’ தம்பி இந்தாங்க 1000 டாலர்.. Facebook-கை ‘அலெர்ட்’ பண்ணி பரிசை அள்ளிய மதுரை இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertising
Advertising

பேஸ்புக் பக்கத்தில் தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்களது வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் செய்திகளை பதிவேற்றம் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த தொகுப்புகளை பாதுக்காப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் ரைட்ஸ் மேனேஜர் (Rights Manager) என்ற ஒரு வசதியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இதில் இருக்கும் சில வசதிகள் மூலமாக தனியார் நிறுவனத்தின் தரவுகளை எளிதாக பயன்படுத்தி அதை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தும் நிலை உள்ளதாக மதுரை தவுட்டு சந்தை பகுதியை சேர்ந்த இளைஞர் கிஷோர் கண்டுபிடித்துள்ளார். உடனே இந்த பாதுகாப்பு குறைப்பாட்டை பேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மாணவரின் இந்த ஆலோசனையை கேட்டு பேஸ்புக் நிறுவனம் அந்த குறைபாட்டை சரி செய்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டியதற்காக மாணவருக்கு பேஸ்புக் நிறுவனம் 1000 டாலர்களை பரிசாக வழங்கி பாராட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 76 ஆயிரம் ரூபாய். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவரை பலரும் பாராட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்