அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் - மதுரை கலெக்டர் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடைபெறும் தேதி மாற்றப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜனவரி 17 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வழக்கம். இதனைக் காண்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள்.

நடுவில் வந்த ஞாயிற்றுக்கிழமை

முன்னதாக ஜனவரி 14,15 மற்றும் 16 ஆம் தேதிகள் முறையே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெருகிவரும் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டது.

இதனால் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்தது.

ஆலோசனை நடத்திய ஆட்சியர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை வேறு தேதியில் வைப்பது குறித்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்  சேகர் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதிக்குப் பதிலாக அடுத்தநாள் அதாவது ஜனவரி 17 ஆம் தேதி நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

பொங்கல் முடிஞ்சதும் தொடர் லாக்டவுனா?.. நீண்ட நாள் கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு விளக்கம்!

"இதய தானம் கிடைக்கல".. பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்திய டாக்டர்கள் .. - வெற்றியில் முடிந்த வினோத ஆப்பரேஷன்..!

 

MADURAI, ALANGANALLUR, JALLIKATTU, MADURAI DISTRICT COLLECTOR, PONGAL, அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்