'ஏர்போர்ட்ல கெடந்த மர்ம பார்சல்...' 'ஸ்கேனிங்ல வெடிகுண்டு இருக்க மாதிரி தான் காட்டுது...' 'எல்லாம் செட் பண்ணி வச்சிட்டு ஒப்பன் பண்ணப்போ...' - எதிர்பார்க்காத டிவிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை விமான நிலையத்தில் மர்ம பார்சல் வெடிகுண்டு போல் தென்பட்டதால் விமானநிலையம் 3 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் கன்னியாகுமரியில் இருந்து தபால் மூலமாக சென்னைக்கு அனுப்ப பார்சல் ஒன்று வந்துள்ளது. மதுரை விமான நிலைய சரக்கு முனையத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஸ்கேனிங் செய்து பார்த்தபோது, அதில் வெடிகுண்டு மூலப்பொருள்(டெட்டர் நேட்டர்) இருப்பதுபோல தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சரக்கு முனையப் பகுதியில் இருந்தவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி ராஜேந்திரன், ஊரக காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் வந்தனர்.

அவர்கள் பார்சலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து வந்த நான்கு பார்சல்களும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பார்சல்களைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஸ்மார்ட் வாட்ச், சார்ஜர், மிக்சர், இட்லிப்பொடி, நேந்திரம்பழ சிப்ஸ்  இருந்துள்ளது. பார்சலில் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லையென அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்