'அப்பா...! பல்ல விழுங்கிட்டேன்...' 'வயித்துல போயிருக்கும் என அசால்ட்டா இருந்த பெற்றோர்...' - ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ச்சியான டாக்டர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்7 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கியிருந்த பல்லை வெற்றிகரமாக நீக்கிய மதுரை மருத்துவர்கள் பாராட்டை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையங்குடி, அரியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கு பாலராகவன் என்ற 7 வயது மகன் உள்ளார். பாலராகவன் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனக்கு ஆடிக்கொண்டிருக்கும் பல் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் அன்றைய தினமே சிறுவனின் பல் உடைந்து உடலுக்குள் சென்றுள்ளது.
சிறுவன் பாலராகவன் இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்த போது, உணவுக்குழாய் வழியே வயிற்றுக்குள் சென்றிருக்கும், அதெல்லாம் சரி ஆகிவிடும் என சொல்லிவிட்டனர்.
இந்நிலையில் அன்றிலிருந்து 10 நாட்களாக சிறுவனுக்கு தொடர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. மேலும் மருந்துகள் பல எடுத்தும் சிறுவனுக்கு சரி ஆகவில்லை. இதனால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட சிறுவன் பலராகவனுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் குழந்தை விழுங்கிய அந்த பல் வலது நுரையீரலின் மூச்சுக் குழாயை அடைந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த 29-ம் தேதி காது மூக்கு தொண்டை துறை தலைவர் தினகரன், குழந்தைகள் நலத்துறை தலைவர் பாலசங்கர் மற்றும் மயக்க மருத்துவர்கள் உதவியுடன் பிராங்கோஸ்கோப்பி மூலம் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த பல் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.
மேலும் சிறுவனுக்கு 5 நாட்கள் நுரையீரல் கிருமி தொற்றுக்கான சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் பாலராகவன் முழுமையாக குணமடைந்துள்ளதால் பெற்றோருடன் சிவகங்கைக்கு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களிலும், செய்திகளிலும் பரவி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’இந்த நகரை ’இரண்டாவது’ தலைநகரமா அறிவிச்சா’... "வருங்காலத்துல 'தமிழ்நாடு' சூப்பரா இருக்கும்"... பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரின் கோரிக்கை'!!!
- 'உச்சத்தில்' இருந்து கட்டுக்குள் வந்த கொரோனா... எந்தெந்த மாவட்டங்கள்னு பாருங்க!
- பாதி எரிந்த நிலையில் கிடந்த 'மூதாட்டி' உடல்... 'சிசிடிவி'ய செக் பண்ணி பாத்ததுல... மிரண்டு போன போலீஸ் அதிகாரிகள்... குலை 'நடுங்க' வைக்கும் 'கொடூரம்'!!!
- கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்... தமிழக 'தலைநகரத்துக்கு' கிடைத்த நல்ல செய்தி!
- திடீரென அதிகரித்த எண்ணிக்கையால் 'கலங்கித்தவித்த' மக்கள்... 40 நாட்களுக்கு பின் 'மீண்டு' வந்த தமிழக மாவட்டம்!
- '5 வயதில் பறிபோன பார்வை'... 'அப்பாவுக்கு இருந்த வைராக்கியம்'... 'துரத்திய தோல்விகள்'... ஐஏஎஸ் தேர்வில் வென்று தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த மதுரை பொண்ணு!
- பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும்... தென் மாவட்டங்களுக்கு நேரடி 'விசிட்' அடிக்கும் முதலமைச்சர்... என்ன காரணம்?
- எப்போ பார்த்தாலும் 'டார்ச்சர்' தான்... கடைசியா எவ்ளோ 'சொல்லி'யும் கேட்கல.. கணவரை கொலை செய்தது ஏன்?... ஆசிரியை அதிர்ச்சி வாக்குமூலம்!
- ‘பிரேத பரிசோதனையின்போது’ அதிர்ந்த மருத்துவர்கள்.. ‘மாட்டிக்கொண்ட பிறகு’ மனைவி கொடுத்த ‘பரபரப்பு’ வாக்குமூலம்!
- சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி... 'சிறைக்கு' சென்ற எஸ்.ஐ-க்கு கொரோனா... இன்ஸ்பெக்டருக்கு திடீர் உடல்நலக்குறைவு!