‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடியுடன் நடந்த வீடியோ கான்ஃபிரன்ஸ் கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்கள் அரசு ஊழியர்கள் ஊதியம் கொடுக்க கூட நிதியில்லாமல் இருப்பதாகவும், அதனால் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது குடிமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த நிலையில் ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில், ஆன்லைனில் மதுவிற்பனைக்கு கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழக அரசின் டாஸ்மாக் மனு' 'விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்...' 'சொன்ன காரணம் தான் ஹைலைட்டே...'
- மதுபானங்களை "ஹோம் டெலிவரி" செய்யத் தயாராகும் மாநிலங்கள்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. தமிழகத்தின் நிலை என்ன?
- ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!
- "ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்"!.. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?
- "மதுப்பிரியர்களோடு மதுப்பிரியராக டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற கொரோனா நோயாளி!".. கிடுகிடுக்கவைத்த பரபரப்பு சம்பவம்!
- 'சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும்...' 'கடையை திறக்க விட மாட்டோம்...' 'நாங்க வந்து தடுப்போம்...' 'கமல்ஹாசன் சவால்...'
- 'என்ன மச்சி பாட்டில்க்கு உள்ள என்னமோ மிதக்குது'... 'ஒரு நிமிடம் ஆடி போன குடிமகன்'... பரபரப்பு சம்பவம்!
- ‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்?.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..!
- ‘அவருக்கு 3 குழந்தைங்க இருக்கு’!.. மதுபோதையில் நடந்த சண்டை.. தடுத்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!
- Breaking: TASMAC மதுக்கடைகளுக்கு 'தடை'... உயர்நீதிமன்றம் 'அதிரடி' உத்தரவு... இனி இப்படி மட்டுமே வாங்க முடியும்!