‘அரியர் தேர்வு ரத்து வழக்கு’.. வீடியோ கான்ஃபரன்சிங்கில் குவிந்த மாணவர்கள்.. சேட் பாக்ஸில் வந்த ‘மெசேஜ்’.. கடுப்பான நீதிபதிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியர் தேர்வுகள் ரத்து தொடர்பான வழக்கு விசாரணையை பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங்கில் நுழைந்ததால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இன்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அதில், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, இன்று 26-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆன்லைன் விசாரணையில் லாக் இன் (Log in) செய்தனர். மொத்தம் 350 பேர் வரை லாக் இன் செய்திருந்தனர். ஆனால் பலர் ஆடியோவை மியூட் செய்யாததால், வீடுகளின் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்டவைகளால் இடையூறுகள் ஏற்பட்டன.
இதனை நீதிபதிகள் எச்சரித்தும் பலனில்லாததால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து தேவையில்லாமல் லாக் இன் செய்தவர்களை வெளியேறும்படி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் எவரும் வெளியேறவில்லை. இதனால் தேவையில்லாதவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கினர்.
இந்தநிலையில் சேட் பாக்ஸில் ‘அய்யா பாஸ் பண்ணி விடுங்க’ என மாணவர்கள் மெசேஜ் அனுப்பியதால் நீதிபதிகள் கோபமடைந்தனர். கடந்த விசாரணையின் போதும் இதேபோல் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று இடையூறு ஏற்படுத்தினர். அப்போது மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மருத்துவ படிப்பு சேர்க்கையில் 'புதிய உள்ஒதுக்கீடு' அறிமுகம்!.. மத்திய அரசு அதிரடி!. வெளியான பரபரப்பு தகவல்!.. முழு விவரம் உள்ளே!
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்களின் ‘அசர வைக்கும்’ பங்களிப்பு.. ஆனாலும் 16 வருஷமா அந்த நாடுதான் ‘டாப்’!
- ‘இவங்களுக்கு மட்டும்’... ‘டிசம்பர் 2-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்’... ‘தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு’...!!!
- ‘அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும்’...!!! ‘இலவச அதிவேக வைஃபை சேவை’...!!! ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்’...!
- இது அவங்க ‘வாழ்க்கை’ சம்பந்தப்பட்டது.. ‘அரியர்’ மாணவர்களுக்காக ஆர்பாட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்..!
- ‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்!’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!
- ‘மக்களின் உணர்வோடு விளையாடாதீங்க’!!!... ‘கிரிக்கெட், சினிமா பிரபலங்களுக்கு’... ‘மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...!!!
- 'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
- '4.5 லட்சம் IT ஊழியர்களுக்கு'... 'இந்த கொரோனா நேரத்திலும்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'TCS நிறுவனத்தின் செம்ம அறிவிப்பு!!!'