'தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை'... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அதன் மூலம் பல நோய்கள் பரவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22-ல் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இதையடுத்து 2018 மே 28 அன்று அந்த ஆலைக்குத் தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையைத் திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ''ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, ஆலை மூடலை எதிர்த்து வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.''

இதற்கிடையே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீர்ப்பை மனதார வரவேற்பதாகவும், நீதி வென்றுள்ளதாகவும் தூத்துக்குடி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்