“நீதிமன்றத்தில் சவுந்தர்யா எடுத்த முடிவு!”.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமண விவகாரம்!.. தந்தையின் ஆட்கொணர்வு மனுவில் சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பெண்ணின் தந்தையும் கோயில் அர்ச்சகருமான சாமிநாதன், 19 வயது நிரம்பாத, கல்லூரி படிக்கும் தனது மகளை பிரபு கடத்தி திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மனு மீதான விசாரணையில், முன்னதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யா ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் சவுந்தர்யாவும், சுவாமிநாதனும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறி அவகாசம் அளித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இதனிடையே சவுந்தர்யா கணவர் பிரபுவுடன் சேர்ந்து செல்ல விருப்பம் தெரிவித்ததால் சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டதுடன் சவுந்தர்யாவை அவரது கணவருடன் செல்ல அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அர்ச்சகர் மகளை மணந்த எம்.எல்.ஏ!’. தந்தையின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த பின்.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
- 'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி!
- 'நீதிமன்ற அவமதிப்பு புகார்!'.. 'நடிகர் சூர்யா விவகாரத்தில்'.. சென்னை உயர்நீதிமன்றம் 'பரபரப்பு' உத்தரவு!
- "நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்!"... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்!.. என்ன நடந்தது?
- 'தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை'... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- "இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை!"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்! பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
- 'ஆமா, எனக்கு விவாகரத்து ஆனது உண்மை தான்'... 'அது 'பிரபா'க்கு தெரியும்'... 'அவளை மிரட்டி தான் சொல்ல வச்சு இருக்காங்க' ... பதறும் இளைஞர்!
- “சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
- ‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
- ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!