'சார் லீவ் வேணும்'... 'நான் ஆபீஸ் வந்தா'?...'மிரட்ட வருகிறான் 'மெட்ராஸ் ஐ'... இத மட்டும் செய்யாதீங்க !
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே இளஞ்சிவப்பு கண் நோய் அல்லது 'மெட்ராஸ் ஐ' என அழைக்கப்படுகிறது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் நோய்களும் தற்போது தலைதூக்க தொடங்கியுள்ளது. அதில் சென்னை மக்களை அதிகம் வாட்டி வதைப்பது மெட்ராஸ் ஐ. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 850 பேர் இந்த கண் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கண் இமைப்படல அழற்சி என்பது, கண்ணின் வெண்படலத்தில் ஏற்படும் வீக்கமாகும். (வெண்படலம் என்பது கண்ணின் வெண்மைப்பகுதி மீதும் மற்றும் கண் இமையின் உட்புறத்திலும் அமைந்திருக்கிற மிக மெல்லிய தெளிவான திசுவாகும்). எளிதாக பிறருக்கு பரவக்கூடிய இந்த கண் தொற்றானது, குழந்தைகளை எளிதில் தாக்குகிறது. பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், டியூசன் மையங்களில் மற்றும் அவர்கள் அடிக்கடி சென்று வருகிற பிற இடங்களில் இந்த நோய் தொற்று அவர்களை எளிதில் பாதிக்கிறது.
மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அதிகமான கண்ணீர், கண் இமைகள் மீது படலப்பூச்சாக மாறுகிற அடர்த்தியான, மஞ்சள் நிறத்திலான வெள்ளைக்கழிவு ஆகியவை வெளிப்படும். கண்ணிலிருந்து பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் திரவம் சுரக்கும். தொற்றுப்பாதிப்புள்ள நபருக்கு கண்களில் அரிப்பு உணர்வும், எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். மங்கலான பார்வையும் அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும் உணர்வும் அவர்களுக்கு இருக்கக்கூடும்.
இந்த நோயானது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை நீடிக்கக் கூடும் மற்றும் அதன் பிறகு தானாகவே பாதிப்பு சரியாகிவிடும். இருப்பினும் மெட்ராஸ் ஐ நமக்கு ஏற்பட்டால் சில விஷயங்களை மட்டும் செய்ய கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ''அதன்படி பாதிப்பு இருக்கும்போது, உங்களது கண்களை தொடவோ அல்லது தேய்க்கவோ கூடாது. கண் மருத்துவர் ஒருவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு கண் சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் போன்ற மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.
கண் மேக்-அப் சாதனங்கள், கான்டக்ட் லென்ஸ்கள் ஆகியவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிற தனிநபர்களின் ஆடைகளோடு சேர்த்து உங்களது ஆடைகளை துவைக்கக்கூடாது'' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனிடையே நோய் தொற்று பாதிப்புள்ள நபரோடு நேருக்கு நேர் கண்ணை பார்ப்பதன் காரணமாக மெட்ராஸ் ஐ ஒருவருக்கு ஏற்படுவதில்லை. தொற்று பாதிப்புள்ள நபரை தொட நேர்ந்தால், அதன்பிறகுசோப்பு மற்றும் நீரைக்கொண்டு கைகளை சுத்தம் செய்தாலே போதுமானது.
மற்ற செய்திகள்
குட் 'ஸ்டூடன்ட்'னா வாங்க, 'கலெக்டர்' ஆகலாம் ... 'மகளிர்' தின ஸ்பெஷலாக ... உதயமான ஒரு நாள் 'கலெக்டர்'
தொடர்புடைய செய்திகள்
- ‘என் ஆண்ராய்டு போனையும் 200 ரூபாயும் வச்சிகிட்டு அத கொடுக்குறியா?’.. “ஊர்க்காரன்னு நம்புனதுக்கு வெச்சு செஞ்சுட்டான்!”.. கதறும் இளைஞர்!
- 'ஹெலிகாப்டர்' சிக்ஸை பறக்கவிட்ட 'தோனி'... பயிற்சியின் போதே 'பட்டையை' கிளப்பும் 'தல'... 'வைரலாகும் வீடியோ'...
- 'சென்னையில் பரிதாபம்'...'பார்லர்ல இருந்து வீட்டிற்கு வந்த பெண்'... தூங்கி எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!
- சென்னை, தேனாம்பேட்டை அருகே 'நாட்டு வெடிகுண்டு' வீச்சு... 'அதிர்ச்சியில்' உறைந்த வாகன ஓட்டிகள்.. கார் 'கண்ணாடிகள்' சேதம்...
- "உன் மனைவி எனக்கு, என் கணவர் உனக்கு..." துணையை மாற்றிக் கொள்ளும் 'ஆன்லைன்' டேட்டிங்... சென்னையில் பரவும் 'மீ.வீ.' கலாச்சாரம்...
- 'சளி, காய்ச்சல் மாதிரி 'அது'வும் அடிக்கடி வரும்!'... கொரோனாவின் எதிர்காலம் குறித்து விஞ்ஞானிகளின்... பதைபதைக்க வைக்கும்... ஷாக் ரிப்போர்ட்!
- VIDEO: ‘கத்தியை காட்டி ரகளை செய்த வாலிபர்’.. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பரபரப்பு..!
- ‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ...
- இந்த ‘அற்புதமான’ சர்பிரைஸுக்கு நன்றி!... ‘சென்னைக்காரருக்கு’ துபாயில் அடித்த ‘ஜாக்பாட்’...
- 'போக்குவரத்து செலவுக்காக... 100 சவரன் நகை கொள்ளை'!... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செய்த 'த்ரில்லர்' சம்பவம்!