ஓ...! இது வேறையா...? 'பப்ஜி மதன் விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்...' - போலீசார் வெளியிட்ட இ-மெயில் ஐடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

யூடியூப்பில் தடை செய்யப்பட்ட பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடி பிரபலமானவர் யூடியூப்பர் மதன் ஓ.பி. இவர் தன்னுடைய முகத்தை காட்டாமலே பேசி யூடியூப்பில் பிரபலமானார்.

ஓ...! இது வேறையா...? 'பப்ஜி மதன் விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்...' - போலீசார் வெளியிட்ட இ-மெயில் ஐடி...!

அதுமட்டுமல்லாது பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி நுணுக்கங்களுடன் விளையாடுவது என்று யூடியூப்பில் நேரலை செய்வது இவரின் வழக்கம். இந்த நிலையில், விளையாட இணையும் சிறுவர்கள், பெண்களை ஆபாசமாக பேசியதாக பல புகார்கள் எழுந்தது. இதற்கு சாட்சி அவரின் யூடியூப் வீடியோக்களே.

தினமும் 20 மணி நேரத்திற்கும் மேல் பப்ஜி விளையாடும் மதன், கேமிங் வீடியோக்களில் தான் பலருக்கு உதவுவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் போலீசாருக்கு சவால் விட்டு தருமபுரியில் பதுங்கியிருந்த மதனை, சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து கிடுக்குபிடி பிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து யூடியூப் மூலம் வந்த பணம் மற்றும் மக்களிடம் நடத்திய நாடகத்தால் கிடைத்த மோசடி பணத்தில் 3 சொகுசு கார்கள், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 பங்களாக்களை மதன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு தவிர மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய் பணமும் முடக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை யூடியூப்பில் நேரலை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த பணத்தில் மதன் OP சல்லி பைசா கூட வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு பல இலட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் வாங்கி குவித்துள்ள மதன், வருமானத்தை மறைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஊழல் குறித்து வரித்துறையினருக்கு தகவல் அளிக்க உள்ள நிலையில், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் குறைந்த தொகையாக இருந்தாலும் கூட புகாரளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதற்காக dcpccb1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்