‘கோயிலுக்கு போனபோது’... ‘லாரி மீது மோதி, உருக்குலைந்த புதிய டாடா ஏஸ்’... ‘அலறிய சிறுவர்கள்’... ‘14 பேருக்கு நேர்ந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, லா.கூடலூரைச் சேர்ந்த 14 பேர், ராவுத்தநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு, டாடா ஏஸ் என்ற சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். புதிதாக வாங்கிய அந்த சரக்கு ஆட்டோவுக்கு, பூஜைப் போடுவதற்காக, உள்ளூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான சிறுவர்களை, ஓட்டுநர் அழைத்துக் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. .
கடம்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, வளைந்து நெளிந்து சென்ற சாலையில், வலதுபுறமாக ஏறிய சரக்கு ஆட்டோ, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே வந்த சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் லாரி மீது, நேருக்கு நேர் சரக்கு ஆட்டோ மோதியது. இதில் சரக்கு ஆட்டோ உருக்குலைந்து போனது. சரக்கு ஆட்டோவில் இருந்த சிறுவர்கள் அலறித்துடித்தனர். இதில், மகாலட்சுமி (16), பொன்மலை செல்வன் (13), தமிழரசன் (17) ஆகிய மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த காயத்தால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 5 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகத்தில் சரக்கு ஆட்டோ சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பேருந்து கவிழ்ந்து’.. ‘நொடியில் நடந்த கோர விபத்தில்’.. ‘14 பேர் பலி; 98 பேர் பலத்த காயம்’..
- கணவரை 'வெளிநாட்டுக்கு' விமானம் ஏற்றிவிட்டு திரும்பியபோது.. நடந்த விபரீதம்.. மனைவி உட்பட மூவர் பலி.. 4 பேர் படுகாயம்!
- ‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..
- ‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..
- ‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'!
- 'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'!
- 'அசுர வேகத்தில் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள்'.. 'அலறித் துடித்த மாணவிகள்'.. 30க்கும் மேற்பட்டோரின் பரிதாப நிலை!
- 'இன்னையோட இந்த குடிய விடுறோம்'...'இது தான் கடைசி சரக்கு'...இப்படி சொன்னவருக்கு நேர்ந்த சோகம்!
- ‘தீடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘மும்பை மின்சார ரயிலில் மளமளவென பரவிய தீ’... வீடியோ!
- ‘குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு’... ‘கூட்டிச் சென்றபோது நேர்ந்த சோகம்’... 'நொடியில் நடந்த கோர விபத்து'!