வனப்பகுதியில்... சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி... ஈரோடு அருகே பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே வனப்பகுதியில் இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்திற்கு அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெருந்துறை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம் ஜோடியின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இறந்த நிலையில் இருந்த காதல் ஜோடிகளின் அருகே பை ஒன்று இருந்துள்ளது. அதனை போலீசார் சோதனையிட்டதில், உயிரிழந்த இளம்பெண்ணின் பெயர் சுகன்யா என்பது தெரியவந்தது. இளைஞர் குறித்த விவரம் எதுவும் தெரியவராததால், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம் காதல் ஜோடி உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உன்ன விட்டு என்னால இருக்க முடியாது’... சிறு வயதில் விளையாண்ட மரத்தடியிலேயே... இரட்டையர்கள் எடுத்த ‘விபரீத’ முடிவு... உருக்கம் தெரிவித்த ‘காதலி’!
- எல்லாம் சரியாயிடும்... சமாதானம் செய்த பெற்றோர்... இளம்பெண்ணின் விபரீத முடிவு... ஒரே ஒருமுறை பார்க்கணும்... கெஞ்சிய கணவர்!
- ‘கிறிஸ்துமஸ்’ விடுமுறை முடிந்து... அலுவலகத்தை திறந்தபோது ‘காத்திருந்த’ அதிர்ச்சி... ‘உறைந்துபோய்’ நின்ற ‘சென்னை’ ஊழியர்கள்...
- பிரபல இசைக்குழு ‘லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் ராமன் ‘சென்னை’ வீட்டில் ‘அதிர்ச்சி’ மரணம்...
- ‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- ஆற்று பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்... அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்... சில நிமிடங்களில் நடந்த சோகம்!
- கல்யாணமாகி 9 மாசம் தான்... ‘மனைவி’யிடம் பேசிவிட்டு வந்து... கவர்ன்மெண்ட் ‘டாக்டர்’ எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்துபோன குடும்பத்தார்!
- 'சமாதானம்' செய்தும் கேட்கல... 'தங்கை' எடுத்த 'விபரீத' முடிவு... காப்பாற்றப் போன ‘அண்ணன்’... சில நிமிடத்தில் நடந்த ‘பயங்கரம்’!
- ‘ஃபோன்’ செய்தும் எடுக்கல... ஆசைப்பட்டு சேர்ந்த... வங்கி அதிகாரியின் ‘விபரீத’ முடிவு... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ஊழியர்கள்... சிக்கிய ‘கடிதம்’!
- 'வயிறு வலிக்குதுனு' சொல்லிட்டு... 'ஹாஸ்டலில்' மாணவர் செய்த காரியம்... 'அதிர்ந்து' நின்ற சக மாணவர்கள்!