'தார்ச்சாலையா? புதைக்குழியா?'... சரக்கு லாரிக்கு நேர்ந்த ‘இப்படியொரு’ கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரபாளையத்தில் அண்மையில் புதிய தார்ச்சாலை போடப்பட்டது. ஆனால் அந்த சாலை அமைக்கப்பட்ட பணியில் இருந்த அலட்சியத்தால், ரேஷன் கடைக்குச் சென்ற லாரி ஒன்றின் கதி பதைபதைக்க வைத்துள்ளது.

குமாரபாளையத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பகுதியில், சமீபத்தில்தான் பழைய தார்ச்சாலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புணரமைக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழியே நேற்றைய தினம் (ஜூன் 25,2019) வந்த சரக்கு லாரி ஒன்று சாலையில் சக்கரத்தோடு புதைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

ரேஷன் கடைக்கு உணவுப்பொருட்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த இந்த லாரி, சாலைக்கடியில் குறுக்குவாக்கில் செல்லக் கூடிய பாலம் உடைந்ததால் சாலை லாரியை உள்வாங்கிக் கொண்டதால் உள்ளே புதைந்தது. விசைத்தறிக் கூடங்கள், அரசுப்பள்ளி என பலவும் இருப்பதால் எப்போதும் படு பிஸியாக இருக்கும் இந்த சாலையில் இந்த சம்பவம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பின்னர் கிரேனின் உதவி கொண்டு லாரி மீட்கப்பட்டது.

சரக்கு லாரிகள், மணல் லாரிகள், கனரக லாரிகள் எல்லாம் எப்போதும் புழங்கும் இந்தச் சாலையில், சாலை அமைக்கப்பட்ட பணியில் இருந்த மெத்தனமும், இவ்வளவு தரக்குறைவாக சாலை அமைக்கப்பட்டதும்தான் இந்த கதி உருவாகக் காரணம் என்று கூறும் அப்பகுதி மக்கள், இந்த சம்பவத்தால் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

ROAD, TAMILNADU, LORRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்