‘டிராக்டரை முந்திய டிப்பர் லாரி’!.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’! கைக்குழந்தையுடன் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இருசக்கர வாகனம் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் 1 வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உப்பார்பட்டி விளக்கு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிராக்டரை முந்திக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத வேல்முருகன் உடனே பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனம், சாலையில் சரிந்தபடியே லாரி டயருக்கு அடியில் சிக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மாரியம்மாளுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோயில் குளத்தில் மூழ்கிய தாய்’! ‘தாயை காப்பாற்ற குளத்தில் குதித்த 7 வயது மகள்’! இருவரும் தண்ணீரில் மூழ்கிய பரிதாபம்..!
- ‘டீ குடிக்கப் போன சேல்ஸ் மேன்’.... ‘ஸ்கூட்டர் மீது மோதி’... ‘30 அடி தூரம் இழுத்துச் சென்ற கார்’... ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
- ‘3 மாத கர்ப்பம்’!.. ‘திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணி’.. கல்யாணமான 6 மாதத்தில் நடந்த சோகம்..!
- ‘10 டன் வெங்காயம்’! ‘திடீரென குறுக்கே வந்த பன்றிகள்’.. ‘சடன் பிரேக் போட்ட டிரைவர்’.. சென்னை அருகே பரபரப்பு..!
- VIDEO: ‘திடீரென கழன்ற ஜேசிபி பின் சக்கரம்’!.. கண் இமைக்கும் நேரத்தில் காரில் விழுந்து விபத்து..!
- 'அடுத்தடுத்து பழுதான 100க்கும் மேற்பட்ட பைக்குகள்!'.. கலப்பட பெட்ரோல் போட்ட பங்க்.. பரபரப்பு சம்பவம்!
- 'உயிர் போகும் தருணத்தில்’... ‘நெருங்கிய நண்பனுக்கு ஃபோன் செய்து’... ‘கடைசி உதவி கேட்ட இளைஞர்’... 'மனதை உருக்கிய சம்பவம்'!
- ‘ஒன்றரை வயது’ குழந்தையுடன்.. வீட்டுக்கு திரும்பும் வழியில்.. ‘இளம் தம்பதிக்கு’ நொடிப்பொழுதில் நடந்த ‘கோர விபத்து’..
- ‘செல்ஃபோனில் தந்த தொல்லை’... ‘கணவருடன் சேர்ந்து இளம் பெண்’... 'செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..