தமிழகம் முழுவதும் 'பேருந்து' எப்போது இயக்கப்படும்?... 'சென்னை'யின் நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

3-வது கட்ட ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 4-வது ஊரடங்கு குறித்த தகவலை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது துவங்கும்? என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்  சில மாவட்டங்கள் கொரோனோ இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்க ஆலோசித்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல குறைவான நோய்த்தொற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் அதிக பாதிப்பு கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை முற்றிலும் இருக்காது அதற்கான ஏற்பாடுகள் காலதாமதம் ஆகும் என்று தெரிவித்து உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்