'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில்... இன்று முதல் நடைமுறைக்கு வரும் 'தளர்வுகள்' இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தை பொறுத்தவரை 6-வது கட்டமாக ஜூலை 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் (ஜூலை 6) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை கீழே பார்க்கலாம்.

* ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 80 நபர்கள்) இயங்கலாம். அவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களே வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

* மேலும், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம்.

* வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் (ஜவுளி மற்றும் நகைக் கடைகள்) 50 சதவீத தொழிலாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

* ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். போன்கள் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் சேவையை இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். உணவு கொண்டு வழங்குபவர்கள் தங்கள் நிறுவனத்தின் அடையாள அட்டையை பெற்று பணியாற்ற வேண்டும்.

* காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும்.

* டாக்சிகளில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது.

* முடி திருத்தும் நிலையங்கள், ‘ஸ்பா’ மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. போடாமல் இயங்கலாம். மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.

* கோவில்கள் அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தளர்வுகள் விவரம் வருமாறு:-

* கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கப்படலாம்.

* அனைத்து வகையான தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

* ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதில், குறைந்தபட்சம் 20 சதவீதத்தினர் வீடுகளில் இருந்து பணிகளை பார்க்கலாம்.

* தனியார் நிறுவனங்கள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

* வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏ.சி. இயக்காமல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 5 வாடிக்கையாளரே ஒரு நேரத்தில் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

* டீ கடைகள், ரெஸ்டாரண்டுகள் மொத்த இருக்கையில் 50 சதவீத இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் செயல்படலாம்.

* வாடகை கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது.

* மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள், முட்டை கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்